மாவட்ட செய்திகள் மார்ச் 01,2023 | 21:08 IST
திருப்பூர் காங்கேயம் பாப்பினி பகுதியை சேர்ந்தவர் பிரேமா 30. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பிரேமா கணவரை பிரிந்து வசிக்கிறார். பிரேமாவுக்கு அதே பகுதியை சேர்ந்த விஜய்யுடன் பழக்கம் ஏற்பட்டது. விஜய்க்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதை அறிந்த பிரேமா, இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோவை வளைதளத்தில் ஷேர் செய்தார். ஆத்திரமடைந்த விஜய், பிரேமாவிடம் தகராறு செய்து, பிரேமாவை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தினார் அக்கம்பக்கத்தினர்பிரேமாவை மீட்டு காங்கயம் மருத்துவமனையில் சேர்த்தனர். விஜய் தீ வைத்ததாக பிரேமா வாக்குமூலம் அளித்து இறந்தார். காங்கேயம் போலீசார் விஜயை கைது செய்தனர்.
வாசகர் கருத்து