மாவட்ட செய்திகள் மார்ச் 01,2023 | 21:11 IST
திருவள்ளூர் மாவட்டம் கீழானூர் கிராமத்தினர், செங்குன்றம் நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். கீழானூர் கிராமத்தில் குடியிருப்புகளுக்கும் அவர்களின் விவசாய நில பகுதிக்கும் இடையே இருந்த பாதையை, நெடுஞ்சாலை துறையினர் தடுப்பு சுவர் அமைத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடந்தது. போலீசார் வந்து சமாதானம் செய்து கூட்டத்தை கலைத்தனர். மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
வாசகர் கருத்து