மாவட்ட செய்திகள் மார்ச் 03,2023 | 00:00 IST
தஞ்சாவூர் பெரிய கோயிலில் 18 நாள் சித்திரைப் பெருவிழா, ஏப்ரல் 17-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான பந்தக்கால் நடும் விழாவும் சிறப்பு பூஜைகளும் இன்று நடந்தன. இந்து அற நிலைய துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 1-ல் நடக்கிறது.
வாசகர் கருத்து