மாவட்ட செய்திகள் மார்ச் 04,2023 | 13:41 IST
திருவொற்றியூர் தியாகராஜ வடிவுடை அம்மன் கோயில் பிரமோற்சவத்தின், முக்கிய நிகழ்வான சந்திர சேகரர் திருத்தேர் உற்சவம் இன்று காலை நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தார். கோயிலில் கைலாய வாத்தியங்கள், சங்க நாதம் முழங்க, சிவனடியார்கள் நடனமாட , 42 அடி உயர தேர் புறப்பாடு நடந்தது.
வாசகர் கருத்து