மாவட்ட செய்திகள் மார்ச் 04,2023 | 14:09 IST
பந்தலூரில் கருவேலம், பார்த்தீனியம், உன்னி செடிகளை அகற்றும் பணிகள் தொடங்கின. பெருங்கரை, எரிமாடு, சேரம்பாடி முதலான பகுதிகளில், வருவாய் துறை அதிகாரிகள் மேற்பார்வையில், தூய்மைப் பணியாளர்கள் கிராமத்தினருடன் சேர்ந்து, இந்த அந்நிய செடிகளை அகற்றினர். தமிழகம் முழுக்க இந்த செடிகளை அகற்ற வனத்துறை கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், முடிவு செய்திருந்தனர். அதன்படி இந்த செடிகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
வாசகர் கருத்து