மாவட்ட செய்திகள் மார்ச் 04,2023 | 15:48 IST
ஆம்பூர் அடுத்த பனங்காட்டேரி மலைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நாட்டு துப்பாக்கியுடன் இருந்தவரை பிடித்து விசாரித்தனர். நாயக்கநேரியை சேர்ந்த ஜெயபால் மகன் ஏழுமலை என தெரிந்தது. அவருடன் இருந்த மனோகர், குமார் வனத்துறையினர் வருவதைக் கண்டு தப்பியோடியுள்ளனர். ஏழுமலையை கைது செய்து நாட்டு துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து