மாவட்ட செய்திகள் மார்ச் 07,2023 | 17:58 IST
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் குமரி பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் 39. இவரது மனைவி சத்யா, 37 இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சரவணன் தனது தோழி மகாலட்சுமியுடன் நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் 3 ந் தேதி சரவணனை காரில் மர்ம கும்ப கும்பல் நிலம் விற்பனைக்கு உள்ளது என கூறி கொல்லிமலைக்கு அழைத்துச் சென்று பணம் கேட்டு மிரட்டினர். பயந்த சரவணன் செல்போன் மூலம் தனது மனைவி சத்யாவிடம் தொடர்பு கொண்டு பணத்தை ஏற்பாடு செய்ய கூறினார் இதனிடையே கடத்தல் கும்பல். சரவணணை 3 நாட்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து விட்டு உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பினர் போலீசார் கடத்திய கும்பலை தேடி நாமக்கல் பகுதியில் சேர்ந்த கவின், வினோத், நாகராஜ், சுந்தர் ஆகிய 4 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பினர் கொலை செய்ய திட்டமிட்ட மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
வாசகர் கருத்து