சம்பவம் மார்ச் 08,2023 | 00:00 IST
கேரளா, வர்க்கலாவில் பாரா கிளைடிங் சாகச விளையாட்டு பிரபலம் ஆகி வருகிறது. கோவையை சேர்ந்த பவித்ரா, பயிற்சியாளர் சந்தீப்புடன் பாரா கிளைடிங்கில் பறந்தார். காற்றின் வேகம் காரணமாக, வேறு திசையில் இழுத்து செல்லப்பட்டனர். ஊருக்குள் 50 அடி உயர ஹை மாஸ் விளக்கு கம்பியில் பாரா கிளைடிங் சிக்கியது. இருவரும் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்தனர். மீட்பு குழுவினர், கீழே மெத்தைகள் போட்டு, வலையை விரித்து பிடித்தனர். அந்தரத்தில் தொங்கிய இருவரும் வலையில் குதித்து உயிர்தப்பினர். சிறு காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
வாசகர் கருத்து