மாவட்ட செய்திகள் மார்ச் 09,2023 | 12:26 IST
ஈரோடு மாவட்டம், தாளவாடியில் புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குண்டம் திருவிழா மார்ச் மாதத்தில் நடக்கும். இந்த ஆண்டு விழா 7 ஆம் தேதி துவங்கியது. அம்மன் கோவிலில் இருந்து சகல மேல வாத்தியங்களுடன் ஆற்றுக்கு சென்று அம்மனுக்கு பூஜை செய்யபட்டது. கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இன்று காலை பூசாரி சிவண்ணா குண்டம் இறங்கினார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.. இந்த கோவில் பள்ளிவாசல் அருகே அமைந்துள்ளது.
வாசகர் கருத்து