மாவட்ட செய்திகள் மார்ச் 10,2023 | 12:39 IST
நீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை பாதையில் 5 காட்டு யானைகள் உலா வருகின்றன.. இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்ற மலை ரயிலை, ரன்னிமேடு அருகே யானைகள் வழிமறித்தன. மலை ரயில் நிறுத்தப்பட்டது. வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால், குன்னூர் ரயில் நிலையத்துக்கு மலை ரயில், 15 நிமிடங்கள் தாமதமாக வந்தது.
வாசகர் கருத்து