மாவட்ட செய்திகள் மார்ச் 10,2023 | 00:00 IST
ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டத்தில் பெத்தகும்மடாபுரம் கிராமத்தில் கடந்த வாரம் நான்கு புலி குட்டிகள் வழி தவறி வந்தன. வனத்துறையினர் அதனை தாய் புலியுடன் சேர்க்க சில தினங்களாக முயற்சி செய்தனர். ஆனால், மனிதர்களின் தொடுதல் புலி குட்டிகளிடம் இருந்ததால், தாய் புலி வரவில்லை என வன துறையினர் கூறினர். இதையடுத்து திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில், புலிகளை ஒப்படைத்தனர். வேட்டையாடும் பயிற்சி பெற்ற பிறகு, புலி குட்டிகளை மீண்டும் காட்டில் விட முடிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து