மாவட்ட செய்திகள் மார்ச் 10,2023 | 00:00 IST
காஞ்சிபுரம், திருக்காலிகமேடுவை சேர்ந்தவர் கிஷோர்குமார். கல்லூரி மாணவர். காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே நிறுத்தி வைத்திருந்த இவரது டூ வீலர் திருடு போனது. போலீசில் கிஷோர்குமார் புகார் அளித்தார். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த சிவகாஞ்சி போலீசார், பள்ளி யூனிபார்மில் வந்த மாணவர்கள், வண்டியை திருடி செல்வதை பார்த்தனர். அவர்களை விரைவில் பிடித்துவிடுவோம் என்று போலீசார் கூறினர்.
வாசகர் கருத்து