மாவட்ட செய்திகள் மார்ச் 12,2023 | 00:00 IST
கரூர் மாவட்டம் பெருமாள் பட்டியில் ஸ்ரீ வீரசங்கி அம்மன் கோவில் விழா 2 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் விழாவில் ஊர் மக்கள் ஊர் எல்லையில் இருந்து தாரை தப்பட்டை உடன் ஊர்வலமாக வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அப்போது பலருக்கும் அம்மன் அருள் வந்து சாமியாட்டம் ஆடினர். விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து