மாவட்ட செய்திகள் மார்ச் 12,2023 | 11:08 IST
திருச்சி மாவட்ட, சீனிவாசநல்லூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி சென்றனர். திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீரராக்கியம் தனியார் பாலிமர் கம்பெனி அருகே நடந்து செல்லும்போது பின்னால் வந்த மினி சரக்கு வேன் பக்தர்கள் மீது மோதியது. இதில் மேலசீனிவாசநல்லூரை சேர்ந்த சுந்தரம்-55 அதே இடத்திலே இறந்தார். மூவர் படுகாயத்துடன் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து