மாவட்ட செய்திகள் மார்ச் 13,2023 | 14:02 IST
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றர். வாரம் ஒருமுறை, வீட்டு இணைப்புகளுக்கு நல்ல தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில். 15 நாட்களுக்கு மேலாக நல்ல தண்ணீர் வரவில்லை . 15 நாட்கள் கழித்து இன்று விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் ஒரு மணி நேரம் மட்டும் வந்ததால் மக்கள் ஆத்திரம் அடைந்தனர். காலி குடங்களுடன் சூசையாபுரம் பகுதியில் மறியல் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வாரம் ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்
வாசகர் கருத்து