மாவட்ட செய்திகள் மார்ச் 13,2023 | 16:47 IST
ருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழாவையொட்டி, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தாழக்கோயில் பக்தவச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தின் வாத்திய மண்டபம் அருகில் ஒரு பந்தக்காலும், சோமாஸ்கர் கோயில் எதிரே ஒரு பந்தக்காலும், திரிபுர சுந்தரி அம்பாள் கோயில் கொடி மரம் அருகே ஒரு பந்தக்காலும் நடப்பட்டன. தொடர்ந்து பஞ்ச ரதத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
வாசகர் கருத்து