மாவட்ட செய்திகள் மார்ச் 14,2023 | 12:14 IST
சென்னை, ஆவடி அருகே, பருத்திப்பட்டு சோதனை சாவடியில், போலீசார் வாகன சோதனை நடத்தினர். நான்கு சக்கர லோடு வாகனத்தை சோதனையிட்ட போது, பத்து மூட்டைகளில் மொத்தம் ஒரு டன் குட்காவை கொண்டு சென்றது தெரிந்தது. வாகனத்தை கைப்பற்றிய போலீசார், அம்பத்தூர் குலாம் மொய்தீன், டிரைவர் செல்வகுமாரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து