மாவட்ட செய்திகள் மார்ச் 14,2023 | 12:42 IST
நீலகிரி மாவட்டத்தில், 11 எஸ்டேட் நிறுவனங்கள், 16,500 ஏக்கரில் தேயிலை பயிரிட்டுள்ளனர். வெயில் தாக்கம் காரணமாக, தேயிலை தோட்டங்களில் சிகப்பு சிலந்தி தாக்குதல் காணப்படுகிறது. இதனால் தேயிலை மகசூல் வெகுவாக பாதிக்கும் அபாயம் உள்ளது. வெயில் காரணமாக, குன்னுார், ஊட்டி, மஞ்சூர், கோத்தகிரி பகுதிகளில் பசுந்தேயிலை மகசூல் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கோடை மழையை எதிர்நோக்கியுள்ளனர்.
வாசகர் கருத்து