மாவட்ட செய்திகள் மார்ச் 14,2023 | 19:09 IST
கோவையில் மத்திய அரசின் இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் ‛மல்டி டாஸ்கிங்' பணியிடங்களுக்கு தேர்வு நடத்தது. 5 இடங்களுக்கான இந்த தேர்வை 289 பேர் எழுதினர். தேர்வு எழுதியவர்களின் போட்டோ, கைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. ரிசல்ட் வெளியான நிலையில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ், சரிபார்ப்புக்காக வந்திருந்தனர். அப்போது முதல் 4 இடங்களை பெற்றிருந்தவர்களின் கைவிரல் ரேகை, தேர்வு எழுதிய போது எடுக்கப்பட்டிருந்த ரேகையுடன் ஒத்துப் போகவில்லை. மேலும் ஹால் டிக்கெட்டில் இருந்த போட்டோவும், நேர்முக தேர்வுக்கு வந்தவர்களின் முகமும் மாறி இருந்தது. வன மரபியல் நிறுவன இயக்குனர் குஞ்சிக்கண்ணன் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் அவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அமித் குமார் (30) , அமித் (23), சுலைமான் (25),அமித் குமார் (26) என்பதும் ஆள்மாறாட்டம் செய்து வேறு நபர்களை வைத்து தேர்வு எழுதியதும் தெரிந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து