மாவட்ட செய்திகள் மார்ச் 14,2023 | 21:35 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலாஹட்டி மாதேஸ்வரர் கோவில் திருவிழா 3 நாட்களாக நடந்தது. விழாவையொட்டி பூஜைகளுடன், சில்லானை ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள், பக்தர்களின் அங்கபிரதிஷ்டை நடந்தது. இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுடன், பாரம்பரிய நடனம் நடந்தது. இதில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் நடனமாடி மகிழ்ந்தனர்.
வாசகர் கருத்து