மாவட்ட செய்திகள் மார்ச் 15,2023 | 15:22 IST
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 கிராமங்களின் விளை நிலங்களையும், குடியிருப்புகளையும் இணைத்து புதிய ஏர்போர்ட் அமைக்க உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் மற்றும் 13 கிராம மக்கள், தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் அருகே, இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏர்போர்ட் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும், 13 கிராம மக்களின் வாழ்வாதரத்தை பறிக்க வேண்டாம் என வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து