நம்ம ஊரு கோயில்கள் மார்ச் 17,2023 | 07:38 IST
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூரில் உள்ளது கச்சபேஸ்வரர் கோயில். சிவபெருமாள் , அந்தணர் உருவத்தில் தோன்றி , பிச்சை எடுத்து சுந்தரமூர்த்தி சுவாமியின் பசி போக்கிய இடம் இது. தேவராப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் இது 26வது தலம். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்படுத்திய மந்திரமலை கடலில் மூழ்காமல் இருக்க கச்சபம், அதாவது ஆமை அவதாரம் எடுத்தார் மகாவிஷ்ணு. அப்போது இந்த கோயிலின் தீர்த்தத்தில் நீராடி, சிவனை வேண்டி மலையை தாங்கும் ஆற்றலை பெற்றார். இதனால் தான் இந்த கோயிலின் சிவன், கச்சபேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். ஆதாவது கச்சபம் + ஈசர் என பிரிக்கலாம். கச்சபம் என்றால் ஆமையை குறிக்கும். ஆமைக்கு அருள்புரிந்த ஈசனே கச்சபேஸ்வரர் ஆனார்.
வாசகர் கருத்து