மாவட்ட செய்திகள் மார்ச் 16,2023 | 00:00 IST
சேலம் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவை சேர்ந்தவர் ராஜன். ஆர்எஸ்எஸ் சேலம் நகர மண்டல தலைவர். இவரது வீட்டில் 2022 செப்டம்பர் 25ல் மர்ம நபர்கள் குண்டு வீசினர். இதில் சேலம் கிச்சிப்பாளையம் சையத்அலி மற்றும் பொன்னம்மாபேட்டை காதர் உசேன் கைதாகினர். இவ்வழக்கு விசாரணை CBCID பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வ மீனாட்சி தலைமையிலான போலீசார் சேலம் விரைந்தனர். அங்கு சையத்அலி மற்றும் காதர் உசேன் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தினர். சில ஆவணங்களை கைப்பற்றினர். இருவரிடமும் 4 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
வாசகர் கருத்து