மாவட்ட செய்திகள் மார்ச் 17,2023 | 00:00 IST
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலின் பத்து நாள், தூக்கு திருவிழா, கொடி ஏற்றத்துடன் இன்று தொடங்கியது. முன்னதாக பத்ரகாளியம்மனின் தாய் கோயிலான வெங்கஞ்சி கோயிலில் இருந்து, பெண் குழந்தைகளின் தாலப்பொலி, தாய்மார்களின் முத்துக்கொடைகள் முதலானவை மேள தாளங்களுடன் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டன. தமிழ் நாடு, கேரளத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து வழிபாடு செய்தனர். குழந்தைகளுக்கான நேர்த்திக் கடன் செலுத்தும் முக்கிய நிகழ்வான, தூக்கு திருவிழா ஏப்ரல் 5-ல் நடக்கிறது.
வாசகர் கருத்து