ஆன்மிகம் வீடியோ மார்ச் 17,2023 | 00:00 IST
சென்னை தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 14,880 சதுரஅடியில் 10 கோடி ரூபாய் மதிப்பில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டது. கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ராஜகோபுரம், விமான கோபுரத்துக்கு ஒரே நேரத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பத்மாவதி தாயார் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. திரளான மக்கள் சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை ஒட்டி 2 நாட்களாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து