மாவட்ட செய்திகள் மார்ச் 17,2023 | 19:04 IST
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் மத்திய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் 17.77கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி பகுதிகளுக்கு நவீன குடிநீர் குழாய் அமைக்கும் திட்ட பணிக்கான பூமி பூஜை நடந்தது. நகர் மன்ற தலைவர் செல்வராஜ்,நகராட்சி ஆணையர் மற்றும் திமுக நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்... இதற்காக பள்ளிபாளையம் நகராட்சி மற்றும் நகர் மன்ற தலைவர் சார்பில் வைக்கப்பட்ட பேனரில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறவில்லை. இதனை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் திருச்செங்கோடு டிஎஸ்பி மகாலட்சுமிபேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது...
வாசகர் கருத்து