பொது மார்ச் 17,2023 | 22:06 IST
லண்டன் பேச்சில் பார்லிமென்ட்டை இழிவுபடுத்தி சபையின் உரிமையை மீறிவிட்டார் என ராகுல் மீது ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்தார். பதிலடியாக மோடி மீது ராஜ்யசபா தலைவரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார் காங்கிரஸ் எம்பி வேணுகோபால். ராஜ்யசபாவில் 9-ம் தேதி பேசிய மோடி, "நேருவின் வாரிசுகள் அவரது பெயரை வைக்காமல் காந்தி என பெயர் சூட்டிக்கொள்வது ஏன்?" என கேட்டார். "நேரு பெயர் வைப்பதில் ஏதாவது தயக்கம், அவமானம் இருக்கிறதா? நீங்களே இப்படி தயங்கும் போது, நாங்கள் ஏன் அவரது பெயரை திட்டங்களில் பயன்படுத்த வேண்டும்?" என்றும் கேட்டார்.
வாசகர் கருத்து