மாவட்ட செய்திகள் மார்ச் 19,2023 | 00:00 IST
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ராஜகோபுரம் பகுதியில் வீரவசந்தராய மண்டபம் உள்ளது. 2018-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் மண்டபம் முழுவதும் சேதம் அடைந்தது. மறு சீரமைப்புக்காக தமிழக அரசு, 18.10 கோடி ரூபாய் ஒதுக்கி கொடுத்தது. மண்டபத்தில் 23 அடி உயர 16 கல் தூண்களை சீரமைக்க ராசிபுரத்தில் இருந்து கற்கள் கொண்டுவந்தனர். கோயிலுக்கு சொந்தமான கூடல் செங்குளத்தில், திருப்பூர் ஸ்தபதி வேல்முருகன் தலைமையில் 20 பேர் குழு, முழு வீச்சில் தூண்களை பழைமை மாறாமல் வடிவமைத்து வருகின்றனர்.
வாசகர் கருத்து