மாவட்ட செய்திகள் மார்ச் 19,2023 | 00:00 IST
கரூர் மாவட்டம், மகாதானபுரம் ஊராட்சி 4வது வார்டு குடித்தெரு பகுதிகளில் 10 நாடகளாக குடிநீர் வழங்கப்படவில்லை இதனை கண்டித்து மேட்டுமகாதானபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்டவர்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுனர். லாலாபேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊராட்சி மன்ற தலைவர் உறுதியளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவதாக கூறி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். மறியலால் கரூர், குளித்தலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து