மாவட்ட செய்திகள் மார்ச் 19,2023 | 17:46 IST
கோவை கால்பந்து சங்கம் சார்பில், 'சி.டி.எப்.ஏ., கோவைப்புதுார் பிரண்ட்ஸ் கோப்பைக்கான' கால்பந்து லீக் போட்டி நடந்து வருகிறது . 9 அணிகள் லீக் முறையில் போட்டியிட்டன. இதில், டிரெண்டி இன்ஜி., எப்.சி., அணியும் அத்யாயனா எப்.சி., அணியும் இறுதிப்போட்டியில் விளையாடின. போட்டி, கோவைப்புதுார் 'ஏ' மைதானத்தில் நடந்தது. போட்டி, துவங்கி 10வது நிமிடத்தில் டிரெண்டி அணியின் பிரெட்டி ஒரு கோல் அடித்தார். விக்ரம் 28வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடிக்க டிரெண்டி அணி, 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. அத்யாயனா அணியின் ஜெயசூர்யா 35வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். 46வது நிமிடத்தில் விக்ரம் தனது இரண்டாவது கோல் அடிக்க, ஆட்ட நேர முடிவில் டிரெண்டி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
வாசகர் கருத்து