மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 12:09 IST
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் 10 ம்தேதி முதல் பால்விலையை உயர்த்த கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சர்க்கரைபட்டி ரோட்டில் பாலை கொட்டி மாடுகளை, நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். பால் விலையை உயர்த்த வேண்டும், மானிய விலையில் தீவனங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. வாலாந்தூர் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து