பொது மார்ச் 20,2023 | 12:13 IST
வட சென்னை வளர்ச்சித்திட்டம் 1000 கோடி ரூபாய் செலவில் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் 20 கோடியில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். அடையாறு, கூவம் மறுசீரமைப்பு திட்டம் 1,500 கோடியில் செயல்படுத்தப்படும். அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 320 கோடி ரூபாய் செலவில் வெள்ளத்தடுப்பு, நீர் வழித்தட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி சாலையாக நவீன அம்சங்களுடன் மேம்பாலம் கட்டப்படும்
வாசகர் கருத்து