மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 12:44 IST
------- விருதுநகர், ராஜ பாளையத்தை சேர்ந்தவர் ஷேக் முகமது. லலிதா என்ற 56 வயது பெண் யானையை வளர்த்துவந்தார். உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த யானைக்கு ஆறு மாதம் கட்டாயம். ஒய்வு கொடுக்க வேண்டும் என்று, டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால், ஷேக் முகமது விசேஷங்களுக்கு யானையை தொடர்ந்து அனுப்பிவந்தார். மீண்டும் உடல் நிலை பாதித்த யானைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில், இன்று காலை அது இறந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.
வாசகர் கருத்து