Advertisement

அதிகாரிகளால் கெட்டுப் போன 35 ஆயிரம் லிட்டர் பால்

மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 15:12 IST

Share

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் உற்பத்தியாளர்களின் பால் நிறுத்தப் போராட்டத்தால் கோவை ஆவினுக்கு வரவேண்டிய 35ஆயிரம் லிட்டர் பால் வரத்து பாதிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்ய மகராஷ்டிராவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பால் பவுடர் மற்றும் வெண்ணையை கலந்து நிறைகொழுப்பு ஆரஞ்சு நிற பால் உற்பத்தி செய்த போது அதிகாரிகளின் கவனக்குறைவால் 35ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப் போனதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் அதனை கழிவுநீர் குழாய் வழியாக அப்புறப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து கோவையில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் கையிருப்பு இல்லாமல் போனது. கெட்டுப் போன பாலால் ஆவினுக்கு 21லட்சம் ரூபாய் இழப்பை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் நடந்த இழப்புக்கு அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்வதோடு, இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X