மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 15:17 IST
கிராம கோயில் பூசாரிகள் பேரவையினர், நாகர்கோயிலில் உண்ணாவிரதம் இருந்தனர். பூசாரிகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை, திமுக அரசு நிறைவேற்ற வேண்டும், கோயில்களுக்கு கட்டணம் இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும், பூசாரிகள் நல வாரியத்தை சீரமைத்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உண்ணாவிரதத்தில் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து