மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 16:28 IST
சத்தியமங்கலம் ஜீர்ஹள்ளி வனப்பகுதியான திகினாரை, ஜோரைகாடு, மரியபுரம், கரளவாடி கிராம விளைநிலங்களில் புகுந்த கருப்பன் ஒற்றை யானை விவசாயிகளை மிரட்டியது. பயிர்களை சேதம் செய்து காவலுக்கு இருந்த மூவரை கொன்றது. கருப்பனை பிடிக்க கும்கி யானைகளுடன் வனத்துறையினர் தேடினர். கருப்பன் வனப்பகுதிக்குள் எஸ்கேப் ஆனது. தற்போது மீண்டும் கருப்பன் கிராமங்களில் நுழைந்து அச்சுறுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்பனை பிடிக்க கோரி ஜீரஹள்ளி வன அலுவலகம் முன்பு சமையல் பாத்திரங்களுடன் குடிபுகும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து