மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 17:02 IST
புதுச்சேரியை அடுத்துள்ள ஆரோவில்லில் இயங்கும் ரெட் எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளி ஆண்டுதோறும் தென்னிந்திய குதிரையேற்ற போட்டி நடக்கிறது. 23 வது தேசிய அளவிலான குதிரையேற்றப்போட்டி 16ம் தேதி துவங்கி 4 நாட்கள் நடந்தது. நாடு முழுவதும் இருந்தும் 140 பயிற்சி பெற்ற குதிரைகள் மற்றும் சுமார் 150 வீரர்களும் பங்கேற்றனர். இதன் பரிசளிப்பு விழாநேற்று நடைபெற்றது 18 வயது முதல் 21 வயதுடைய இளையோருக்கு தடை தாண்டும் போட்டியில் பெங்களூரு நேத்ரா,பெங்களூரு தனுஷ் கவுடா ஆகிய இருவரும் முதலிடம் பெற்றனர்.
வாசகர் கருத்து