மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 17:33 IST
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா டூ பாளை ரோட்டில் செல்லும் தனியார் பேருந்து கண்டக்டர் ஷாஜி. பணி முடிந்து வீட்டிற்கு செல்ல பேருந்தில் ஏறினார். கண்டக்டர் ரசூல் டிக்கெட் எடுக்க சொன்னதால் வாக்குவாதம் செய்த ஷாஜி ரசூலை தாக்கினார். கரிங்குன்னம் போலீசார் ஷாஜியை ஸ்டேஷனுக்கு கூப்பிட்டனர். மறுத்ததால் வலுக்கட்டாயமாக இழுத்தனர். இருதரப்பிற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு எஸ்ஐயின் கையை ஷாஜி கடித்தார். தன்னைத்தானே சுவரில் மோதி காயப்படுத்தினார். போலீசார் அவரது நண்பர்கள் உதவியுடன் கைது செய்தனர். ஷாஜி ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர். இவர் மீது நீதிபதியை தாக்கியது உட்பட 9 வழக்குகள் உள்ளது. முசெ: அடிதடியில் ஈடுபட்டவரை கைது செய்ய சென்ற போலீசாரை கடித்த கண்டக்டர்.
வாசகர் கருத்து