மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 17:39 IST
புதுச்சேரி அரசின் கலை பண்பட்டு துறையும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து ஓவியம் மற்றும் சுடுமண் சிற்பம் உருவாக்கும் முகாம் கடற்கரை சாலையில் நடத்தின. இதில் 100 சிற்ப கலைஞர்களும் 100 ஓவியர்களும் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கண் எதிரே உருவாக்கினர். அவர்கள் உருவாக்கிய தாயும் குழந்தையும், மாடும் மேளமும்,அன்னம்,மீன்,விநாயகர் சிற்பங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சிறு வயதில் இருந்து தாய் பாசத்திற்கு தன்னை போல் பலரும் ஏங்குவதை வெளிப்படுத்தும் விதமாக தாயும் குழந்தையும் சிற்பத்தை உருவாக்கியதாக சிற்பி துரை தெரிவித்தார்
வாசகர் கருத்து