மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 00:00 IST
பட்டுக்கோட்டையில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு, பட்டுக்கோட்டை நகராட்சி, பட்டுக்கோட்டை விதைகள் அமைப்பு, மற்றும் விதை சுற்றுச்சூழல் அறக்கட்டளை இணைந்து கோடையில் பறவைகளை காக்க ஜீவகாருண்யம் திட்டத்தை துவங்கியது. நகராட்சி தலைவர் சண்முகப்பிரியா துவக்கி வைத்தார், இந்த திட்டம் மூலம் பட்டுக்கோட்டை நகரப் பகுதிகளில் உள்ள 33 வார்டுகளிலும், தினந்தோறும் பறவைகளுக்கு உணவு, தண்ணீர் ஆகியவை தொடர்ந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் சுரேஷ், விதை சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவனர் சக்திகாந்த், நகராட்சி துப்புரவு அலுவலர் நெடுமாறன் மற்றும் கவுன்சிலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்
வாசகர் கருத்து