மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 19:38 IST
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சூளை பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு 448 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி வீடு கட்டி வழங்கப்பட்டது. வீடுகளிலிருந்து வெளியாகும் கழிவுநீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளுக்கு மத்தியில் தேங்கி நிற்றது. இதனால் மக்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டனர். நடவடிக்கை எடுக்காததால் அவிநாசி - சத்தி சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவிநாசி வட்டாட்சியர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தீர்வு எட்டவில்லை. அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் கழிவுநீரை வெளியேற்ற தற்காலிக நடவடிக்கை எடுத்தனர். நிரந்தர தீர்விற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து