மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 20:43 IST
இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்தவர் முகமது பாசில். 2019ல் சுற்றுலா விசாவில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு வந்தார். தொண்டி குத்பாபள்ளி பகுதியில் வசித்த பெண்ணை திருமணம் செய்து வலை பின்னும் தொழிலில் ஈடுபட்டார். என்ஐஏ இவரது வீ்ட்டை சோதனை செய்தனர். 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருந்தது. கைது செய்து முகமது பாசிலின் கூட்டாளியை தேடுகின்றனர். முசெ: போதைப்பொருள் கடத்தலில் இலங்கையை சேர்ந்தவர் கைது.
வாசகர் கருத்து