மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 12:12 IST
மத்திய அரசையும், ரயில்வே நிர்வாகத்தின் தன்னிச்சை போக்கையும் கண்டித்து கோட்ட தலைவர் பால்ரெக்ஸ் தலைமையில் பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து