மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 16:24 IST
கொரடாச்சேரி அருகே வடக்கு மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். வெளிநாட்டில் வேலை செய்கிறார். மனைவி அமுதா வீட்டில் தனியாக உள்ளார். இரவில் அமுதா எதிர் வீட்டில் உறங்குவது வழக்கம். காலை வந்து பார்த்த போது வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு 21 சவரன் நகை 50 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிந்தது. வடபாதிமங்கலம் அருகே நெடுங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர். 2 நாட்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று காலை வீட்டுக்கு வந்த போது கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 சவரன் நகை திருடப்பட்டது தெரிந்தது. இரண்டு திருட்டு சம்பவங்களையும் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து