மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 17:26 IST
ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ்.மங்கலம் மோர்ப்பண்ணை தர்ம முனீஸ்வரர் கோயில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 37 படகுகளுக்கு 6 கடல் மைல் தொலைவு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. படகிற்கு தலா ஆறு பேர் வீதம் வீரர்கள் காற்றை கிழித்து படகுகளை போட்டி போட்டு அதிவேகமாக செலுத்தினர். கரையில் நின்ற பார்வையாளர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். முதல் பரிசு 40ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 30ஆயிரம், மூன்றாம்பரிசு 25ஆயிரம், நான்காம் பரிசு 20ஆயிரம் என ஏழு படகு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கிராமத் தலைவர் சிங்காரம், முன்னாள் கிராம தலைவர் பாலன், ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி பரிசுகளை வழங்கினர்.
வாசகர் கருத்து