மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 19:49 IST
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன், 28. டைல்ஸ் வேலை செய்து வந்தார். அவதானப்பட்டியை சேர்ந்த சங்கரின் 21 வயது மகள் சரண்யாவும், ஜெகனும் காதலித்தனர். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்தும், வசதியை பார்த்து பெண்ணின் பெற்றோர் காதலை எதிர்த்தனர். எதிர்ப்பை மீறி ஜெகன், சரண்யா திருமணம் செய்து கொண்டனர். சரண்யா குடும்பத்தினர் கோபத்தில் இருந்தனர். இன்று டேம் ரோடு மேம்பாலம் அருகே பைக்கில் சென்ற ஜெகனை, மாமனார் சங்கர் உள்ளிட்ட 3 பேர் வழிமறித்தனர். அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த ஜெகன் இறந்தார். உறவினர்கள், ஊர் மக்கள் அங்கு திரண்டனர். கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை எடுக்க விட மாட்டோம் என உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளை கைது செய்து, நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர். தலைமறைவாக சங்கர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடுகின்றனர்.
வாசகர் கருத்து