மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 11:59 IST
தஞ்சையிலிருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளி வரை செல்லும் கோடைகால சிறப்பு ரயிலை எம்பி பழநிமாணிக்கம் தொடங்கி வைத்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார். செவ்வாய் இரவு 7:40 மணிக்கு புறப்பட்ட ரயில் புதன்கிழமை மதியம் 12:30 மணிக்கு ஹூப்ளியை சென்றடையும். மறு மார்க்கத்தில் திங்கள் இரவு 8.25 மணிக்கு ஹூப்ளியில் புறப்பட்ட ரயில் பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், சேலம், திருச்சி, பூதலூர் வழியாக செவ்வாய் மதியம் 2.15 மணிக்கு தஞ்சையை வந்தடைந்தது. பெங்களூர் செல்லும் பயணிகள் பயனடைவர் என எம்பி பழநிமாணிக்கம் தெரிவித்தார்.
வாசகர் கருத்து