மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 12:17 IST
கேரளா மாநிலம் இடுக்கி மூணாறு சின்னக்கானல் மற்றும் சாந்தன்பாறை பகுதியில் அரிக்கொம்பன் யானை விவசாயப்பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தியது. ரேஷன் கடையை உடைத்து அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றது. அரிக்கொம்பன் இதுவரை 10 பேரை கொன்று,15 வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. அரிக்கொம்பனின் நடமாட்டம் சில நாட்களாக இல்லை. இன்று மீண்டும் பெரியக்கானல் பகுதி்யில் உள்ள ஏலத்தோட்ட குடியுருப்புக்குள் நுழைந்து, விஜயன், அசரப் ஆகியோரது வீட்டு சுவர்களை சேதப்படுத்தியது.
வாசகர் கருத்து