மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 12:22 IST
கோவை துடியலூரை அடுத்த இடிகரைப் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இச்சங்கத்தின் மூலம் 50க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் காலை , மாலை வேலைகளில் பாலை விற்பனை செய்து வருகின்றனர். கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெறப்படும் பால் அப்பகுதி மக்கள் வாங்கிச் செல்வதுடன் மீதமுள்ள பாலை ஆவினுக்கு அனுப்பி விடுகின்றனர். இந்நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என வலியுறுத்தி இடிகரை பால் உற்பத்தியாளர் இன்று ஒரு நாள் பாலை சங்கத்தில் ஒப்படைக்காமல் சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து