மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 13:47 IST
நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணாரபேட்டை அருகே 30 அடி ஆழமுள்ள கிணறு பராமரிப்பு இல்லாமல் இருந்தது. நேற்று பெண் காட்டெருமை ஒன்று இதில் விழுந்தது. வனத்துறையினர், தீயணைப்பு, நகராட்சி துறையினர் பொக்லின் உதவியுடன் 13 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். காலை 11 மணிக்கு துவங்கிய மீட்பு பணி இரவு 12மணிவரை நீடித்தது. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் முயற்சி போன்று அருகில் பள்ளம் தோண்டி காட்டெருமையை மீட்டனர்.
வாசகர் கருத்து